News August 25, 2024
குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்த தம்பதி

தேனி ஜங்கால்பட்டியை சேர்ந்த அபிமன்னன், ராஜாமணி தம்பதியினர். இவர்கள் தனது மகன் அஜித்குமாருடன் வசித்து வருகின்றனர். போதைப்பழக்கத்திற்கு அடிமையான அவர் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்தார். இந்நிலையில் நேற்று (ஆக.24) பணம் கேட்டு நடந்த தகராறில் பெற்றோரை தாக்கினார். கோபமடைந்த பெற்றோர் மகனை மீண்டும் தாக்கியதில் சம்பவ இடத்திலே அஜித்குமார் பலியானார். வீரபாண்டி போலீசார் பெற்றோரை கைது செய்தனர்.
Similar News
News July 11, 2025
தேனி: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ தேனி மாவட்டத்தில் நாளை (ஜூலை.12) குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
தேனி: ஆசிரியர் வேலை வேண்டுமா?

தேனி மக்களே, தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஜூலை.10 முதல் ஆகஸ்ட்12ம் தேதி வரை <
News July 11, 2025
ரேஷன் கார்டில் பிரச்சனையா..இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க

தேனி மாவட்டத்தில் ஜூலை.12 ஆண்டிபட்டி கோரையூத்து சமுதாயகூடம், பெரியகுளம் சருத்துப்பட்டி, தேனி காட்டுநாயக்கன்பட்டி, போடி பெருமாள் கவுண்டன்பட்டி, உத்தமபாளையம் டி.பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறும். இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.