News March 22, 2025
குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. அதில், ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 28, 2025
பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் <
News March 28, 2025
கடன் தொல்லையால் திமுக கிளைச் செயலாளர் தற்கொலை

திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் தி.மு.க., கிளைச் செயலாளர். இவர் சமீபத்தில் அவரது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 28, 2025
படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் பலி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், பனிச்சமேடுகுப்பத்தைச் சோ்ந்தவர் மீனவா் மணிவண்ணன்(36). இவா் கடந்த 18ம் தேதி ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். கரைப் பகுதியிலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் சென்றபோது கடல் அலையின் சீற்றத்தில் படகு சிக்கி கவிழ்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர் நேற்று உயிரிழந்தாா். புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.