News May 7, 2025
குடிநீர் பிரச்னையா? இந்த நம்பரை அழையுங்கள்

சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு, 044 – 4567 4567 அல்லது 1916 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம். மேலும், மாநகராட்சியால் வழங்கப்பட்ட ‘நம்ம சென்னை செயலி’ மூலம் புகார் அளிக்கலாம். அல்லது, மாநகராட்சி மூலம் கொடுக்கப்பட்ட வாட்ஸ்-அப் 94999 33644 எண்ணுக்கு உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். குடிநீர் வடிகால் வாரியம் 24 மணிநேரமும் இயங்க கூடிய கட்டுப்பாட்டு அறையை கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News September 14, 2025
சென்னை: பொறியாளரா நீங்க? கை நிறைய சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசு நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு 2 & 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கெமிக்கல், மெக்கானிக்கல், சிவீல், சுற்றுச்சூழல், தொழில்துறை மாசுபாடு குறைப்பு, எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், உலோகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் வரும் செப்.24க்குள் இந்த <
News September 14, 2025
சென்னையில் தொடரும் சோகம்!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி பாஸ்கர், சென்னை கொரட்டூரில் கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று கட்டடத்திற்கு கான்கிரீட் கூரை அமைக்கும்போது, இரும்பு கம்பிகளை தோளில் சுமந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 14, 2025
சென்னையில் அர்ச்சகராக வாய்ப்பு

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் புதிதாகத் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2025 – 2026ஆம் கல்வி ஆண்டிற்கான பகுதி நேர மாணவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பகுதி நேர வகுப்பில் பயில விரும்பும் மாணவ / மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை www.vadapalaniandavar.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து அக்.13க்குள் விண்ணப்பிக்கலாம்.