News May 7, 2025
குடிநீர் பிரச்சனையா? கவலை வேண்டாம்

கோடை காலம் தொடங்கி உள்ளதால் விழுப்புரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார் அளிப்பதற்கான புகார் எண் 044 -4567 4567 ஆகும். மேலும், கட்டணமில்லா எண் 1916 மூலம் புகார் தெரிவிக்கலாம். ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க 155340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 11, 2025
விழுப்புரம்-சென்னை தடத்தில் அதிவேக ரயில்

விழுப்புரம் முதல் சென்னை வரை 167 கி.மீ தூரத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடிய புதிய அதிவேக ரயில் சேவைக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் நிறைவேறும்பட்சத்தில் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரத்தில் செல்ல முடியும். இந்த ரயில் விழுப்புரம் – திண்டிவனம் – காஞ்சிபுரம் – சென்னை வழி தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
JUST NOW: மாவட்டக்கல்வி அலுவலர்கள் அதிரடி மற்றம்

மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம். விழுப்புரம் தனியார் பள்ளிகள் மா.கல்வி அலுவலர் சண்முகவேல் நெல்லை தொடக்கக்கல்வி மா.அலுவராகவும், திண்டிவனம் தொடக்கக்கல்வி மா.அலுவலர் அருள் விழுப்புரம் தனியார் பள்ளிகள் மா.கல்வி அலுவலராகவும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் விழுப்புரம் மா.தொடக்க கல்வி அலுவராக, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிகள் மா.அலுவராக இருந்த துரைராஜ் நியமனம்செய்யப்பட்டு உள்ளார்.