News October 24, 2024
குடிநீரில் 75% ‘E coli’ என்ற உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா

சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் சென்னை மக்கள் குடிக்கும் நீரை ஆய்வு செய்தனர். இதற்காக சென்னைப் பகுதிகளிலிருந்து 752 வீடுகளில் உபயோகிக்கப்படும் நீரினை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், 75% ‘E coli’ என்ற உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா கலந்து இருக்கிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர். இது, டயரியாவை ஏற்படுத்துக் கூடியது என்பதால் கொதிக்க வைத்து குடிப்பது சிறந்ததாகும். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 13, 2025
சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் 13.12.2025 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறுகிறது. குடிநீர், கழிவுநீர், வரி, கட்டணங்கள் மற்றும் புதிய இணைப்புகள் தொடர்பான பிரச்சனைகளை மக்கள் நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடி தீர்வு பெற இந்த கூட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது .
News December 13, 2025
சென்னை: கல்லூரி மாணவி தலை நசுங்கி சாவு!

பூந்தமல்லி, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த அருந்ததி B.Com இறுதியாண்டு மாணவி, நேற்று காலை தனது தோழி பர்கானா உடன் மொபட்டில் கல்லூரிக்கு சென்றார். ஆவடி சென்னீர்குப்பம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த மணல் லாரி மொபட் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அருந்ததி மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பர்கானா லேசான காயம்களுடன் உயிர் தப்பினார்.
News December 13, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் (12.12.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


