News April 14, 2024
கீழ்வேளூர்: காலில் விழுந்து வாக்கு சேகரிப்பு

கீழ்வேளூர் அடுத்த தேவூர் பகுதியில் ஒன்றிய தலைவர் ஆர்.நிஜந்தன் தலைமையில் தொண்டர்கள் நேற்று வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் இந்த ஒரு முறை மட்டும் பாஜகவிற்கு வாக்களித்து பாருங்கள் நாடாளுமன்றத்தில் உங்களுக்காக வேட்பாளர் குரல் கொடுப்பார். மேலும் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் ஆர்.நிஜந்தன் வாக்காளர்கள் காலிலேயே விழுந்து வேட்பாளருக்காக ஆதரவு திரட்டினார்.
Similar News
News February 7, 2026
நாகை: ரூ.49 லட்சம் மோசடி செய்த நபர் அதிரடி கைது

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ஒருவர் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 13 பேரிடம் ரூ.49 லட்சம் மோசடி செய்ததாக நாகை எஸ்.பி பாலகிருஷ்ணனிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்.பி உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த திருமலை (32) என்ற இளைஞரை கைது செய்தனர்.
News February 7, 2026
நாகை கலெக்டர் கடும் எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் நெல் அல்லது வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது. இதனை மீறும் பட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள் மீதும், நெல் விற்பனை செய்தவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார்.
News February 7, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.06) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


