News November 23, 2024
கீழ்வேளூரில் சாராய வியாபரி மீது குண்டாஸ்

வெண்மணி ஊராட்சி கீழகாவாலக்குடி சேர்ந்த தர்மராஜ் கீழகாவலக்குடி பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடர்பான வழக்கு உள்ளது. மீண்டும் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டார் அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 11, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2,901 பேர் கைது!

நாகை மாவட்டத்தில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சட்டவிரோத மதுக்கடத்தல், கள்ளச்சாராயம் விற்றல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 2,901 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 23,769 லிட்டர் புதுச்சேரி சாராயம் மற்றும் 7,123 புதுச்சேரி மது பாட்டில்கள் கைப்பற்றி உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
நாகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு; ஆட்சியர் அழைப்பு

நாகை மாவட்டம் அரசினர் ITI வளாகத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இன்று (ஆக.11) காலை 10 மணி அளவில் நடைப்பெற உள்ளது. எனவே இதில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஆக.12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.