News February 17, 2025

கீழ்பென்னாத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

image

நெய்வாநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி இந்திரா (வயது 49). இந்திரா கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். கடந்த 14 தேதி மாட்டை கட்டி விட்டு வருகிறேன் என்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர்.பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று விவசாய நிலத்தின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 2, 2025

தி.மலை: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு க்ளிக் <<>>செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 2, 2025

தி.மலை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

தி.மலை மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

News November 2, 2025

தி.மலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்

image

திருவண்ணாமலை உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் நவம்பர் 4ம் தேதி இரவு 9.37 மணிக்கு தொடங்கி, 5ம் தேதி இரவு 7.20 மணிக்கு நிறைவடைகிறது. பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் செல்லும் நிலையில், 4ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்ததாகும் என திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!