News April 17, 2025
கிளி காணவில்லை போஸ்டர் ஒட்டிய தொழிலதிபர்

சித்தோடு பகுதியில் பிரபல மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனது வீட்டில் ஆசையாக ஆப்பிரிக்கன் சாம்பல் நிற கிளியை வளர்த்துள்ளார். அந்தக் கிளி திடீரென காணாமல் போய் உள்ளது. அதோடு கிளியை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டி வலை வீசி தேடிவந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகில் உள்ள கோயில் மரத்தில் அந்த கிளி இருப்பதை அறிந்த சதீஷ் அங்கு சென்று அதனை மீட்டுள்ளார்.
Similar News
News April 21, 2025
தாளவாடி: கணவனை கொன்ற மனைவி!

தாளவாடி, மல்லன்குழியை சேர்ந்தவர் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மல்லன்குழிக்கு நேற்று வந்த தங்கவேலு, தனது இரு மகன்களையும் அழைத்துச் செல்வதாக ரேவதியிடம் கூறியுள்ளாா். இதில் இருவருக்கும் சண்டை வர ரேவதி கல்லை தங்கவேல் தலையில் போட்டு கொன்றுள்ளார். தாளவாடி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News April 21, 2025
ஈரோடு மாநகராட்சி (ம) நகராட்சி ஆணையர் எண்கள்

▶️ஈரோடு மாநகராட்சி ஆணையர் 0424-2258312. ▶️ பவானி நகராட்சி ஆணையர் 04256-230556. ▶️ கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் 04285-222159. ▶️சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர் 04295-220513. ▶️ புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையர் 04295-267061. மக்களே, இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.
News April 21, 2025
ஈரோடு: கடன் பிரச்சனையை தீர்க்கும் கால பைரவர்!

ஈரோடு ஆவல்பூந்துறை, ராட்டை சுற்றிபாளையத்தில், 39 அடி உயர பிரமாண்ட சிலையுடன் கூடிய, கால பைரவர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.