News June 26, 2024
கிறித்துவ தேவாலய பணியாளர்கள் கவனத்திற்கு

சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களில் தகுதியான நபர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Similar News
News October 16, 2025
போடி அருகே அரசு பஸ் மோதி பெண் படுகாயம்

போடி பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (45). இவா் போடி பேருந்து நிலையத்திற்குள் நடந்து சென்றுள்ளாா். அப்போது போடி பேருந்து நிலையத்திலிருந்து மூணாறு சென்ற அரசு பேருந்து இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முருகம்மாள் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போடி நகர் போலீஸார் பேருந்து ஓட்டுனர் ராஜாராம் (51) மீது வழக்கு (அக்.15) பதிவு.
News October 16, 2025
தேனியில் தீபாவளி புகார் எண்கள் அறிவிப்பு-கலெக்டர்

அனைத்து பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை விரைவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள இனிப்பு தயாரிப்பு கடைகளில் இனிப்புகளை தரமாகவும், சுத்தமாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஏதேனும் புகார் இருந்தால் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 15.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.