News August 8, 2024
கிரெடிட் கார்டில் உள்ள சில சிக்கல்கள்

கிரெடிட் கார்டில் விதிக்கப்படும் அதிக வட்டி விகிதங்கள் முக்கிய பிரச்சனையாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். தனிநபர் கடன்களில் 10-15% வட்டி இருக்கும் நிலையில், கிரெடிட் கார்டுகளில் 30-42 வரை வட்டி உயர வாய்ப்புள்ளது. கிரெடிட் கார்டு பில்லில் Minimum Amount Due செலுத்தினால் மீதமுள்ள தொகைக்கு மட்டும் வட்டி வசூலிக்கப்படுவதில்லை. மாறாக முழு நிலுவைத் தொகைக்குமான வட்டி விதிக்கப்படுகிறது.
Similar News
News October 26, 2025
மீண்டும் ஸ்போர்ட்ஸ் டிராமா கதையை இயக்கும் அருண்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. அதன்பின்பு எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், ஸ்போர்ட்ஸ் டிராமாவாக அப்படம் உருவாகி வருவதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். டிசம்பர் (அ) ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ‘கனா’ படத்திற்கு பிறகு மீண்டும் ஸ்போர்ட்ஸ் டிராமா கதையை அருண்ராஜா கையில் எடுத்துள்ளார்.
News October 26, 2025
விஜய்யின் நடவடிக்கை சரியா? தவறா?

கரூர் துயரில் விஜய்யின் நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்காமல், மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதல் கூறுவது சரியா என அரசியல் நோக்கர்கள் கேட்கின்றனர். கரூருக்கு விஜய் செல்லாதவரை படுகாயமடைந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்களின் வலி, வேதனையை அவரால் புரிந்து கொள்ள முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News October 26, 2025
CSK அணியில் வாஷிங்டன் சுந்தர்.. வெளியான தகவல்

CSK அணியில் வாஷிங்டன் சுந்தர் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் ₹3.2 கோடிக்கு வாஷிங்டன் சுந்தரை வாங்கிய நிலையில், அதே தொகைக்கு CSK அவரை டிரேடிங் செய்துள்ளதாக அஷ்வினின் யூடியூப் சேனலில் தகவல் கசிந்துள்ளது. அஷ்வின் IPL-ல் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தால், மண்ணின் மைந்தனான ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை CSK அணி தங்கள் பக்கம் இழுத்துள்ளதாக கூறப்படுகிறது.


