News May 10, 2024
கிருஷ்ணகிரி 22ஆவது இடம்!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 88.9% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85.64 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.98 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டம் 22ஆவது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! அஞ்செட்டி-9789271329, தேன்கனிக்கோட்டை-9445000542, ஓசூர்-9445000541, சூளகிரி-9080745484, போச்சம்பள்ளி-9445000540, ஊத்தங்கரை-9445000539, பர்கூர்-7825873359, கிருஷ்ணகிரி-9445000538. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்ணிக்கோங்க. உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்*
News April 20, 2025
கிருஷ்ணகிரி: கடன் தொல்லை நீங்க செல்ல வேண்டிய கோவில்

கிருஷ்ணகிரி, ஒசூரில் அருள்மிகு சந்திர சூடேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு வந்து சிறப்பு பூஜை செய்தால் வேலைவாய்ப்பு மற்றும் கடன் தொல்லை நீங்கும் என்பது இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை பாக்கியம் பெறவும் இக்கோவிலுக்கு வரலாம். *கடனற்று வாழ இங்கு செல்லவும். நண்பர்களுக்கும் பகிரவும்*
News April 20, 2025
கிருஷ்ணகிரி நண்பனை அடித்து நகையை பறித்த நண்பர்கள்

கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்தூரை சேர்ந்தவர் சின்னப்பையன்(32). கடந்த மார்ச் மாதம் இவருடைய நண்பர்களான மாரியப்பன், சண்முகம் ஆகியோருடன் சேர்ந்த மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்த சின்னப்பையனை தாக்கி 2 1/2 பவுன் செயினை பறித்து தப்பினர். இதுகுறித்த புகாரில் கிருஷ்ணகிரி போலீசாரி இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். *நண்பர்களே ஆனாலும் கவனமாக இருங்கள்*