News March 28, 2024
கிருஷ்ணகிரி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பரப்புரை

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை மாலை தர்மபுரி வருகின்றார். தர்மபுரி திமுக வேட்பாளர் மணி மற்றும் கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரச்சார பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசுகிறார்.
Similar News
News November 21, 2025
கிருஷ்ணகிரி அருகே போலி டாக்கடர் கைது

காவேரிப்பட்டிணம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தவமணி (56) இவர் அந்த பகுதியில் கிளினிக் வைத்து பல ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் மக்களுக்கு மருத்தும் பார்த்துள்ளனர். புகாரி ன் பேரில் நேற்று நவ-20 போச்சம்பள்ளி அரசு மருத்துவ அலுவலர் நாராயணசாமி ஆய்வு செய்து தவமணி முறையாக படிக்காமல் மக்களுக்கு மருத்துவம் பார்ததாக போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் தவமணியை கைது செய்தனர்.
News November 21, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் 2026, மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 வெளியாகும் என தெரிவித்துள்ளார். மக்கள் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து BLA 2 அலுவலரிடம் வழங்கலாம் என்றும், புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் பெயர் நீக்குதல் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிது.
News November 21, 2025
கிருஷ்ணகிரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிருஷ்ணகிரியில் நவம்பர்-22 சனிக்கிழமையன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு மருத்துவ சேவை அளிக்க உள்ளனர். முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை (ம) மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து பயன்பெறுமாறு வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.


