News September 13, 2024
கிருஷ்ணகிரி வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News July 6, 2025
162 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார். அதில் பணிப்பெற்ற 162 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
News July 6, 2025
கிருஷ்ணகிரி: மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக, தென்மேற்குப் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களை முன்னிட்டு, தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் துவக்கி வைத்து, பார்வையிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்டோர் இருந்தனர்.
News July 5, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை.05) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க