News April 3, 2025
கிருஷ்ணகிரி: ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தம்பதியரில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation .nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்
Similar News
News January 7, 2026
கிருஷ்ணகிரி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04343- 292275 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 7, 2026
ஓசூரில் குளத்தில் விழுந்து தற்கொலை!

கிருஷ்ணகிரி: ஓசூர் ஹவுசிங் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(69), ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல சிகிச்சைகள் பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த அவர், தேர்பேட்டை பச்சை குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்ட ஓசூர் டவுன் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 7, 2026
கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி!

பர்கூர், மல்லப்பாடியைச் சேர்ந்தவர் திருமலை(30). எலக்ட்ரீசீயனான இவர், நேற்று முன் தினம் சின்ன பர்கூரில் புதிதாக கட்டப்பட்டு வரு வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தீடீரென மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


