News April 23, 2025
கிருஷ்ணகிரி ரிப்போர்டராக சூப்பர் வாய்ப்பு

நமது WAY2NEWS-ல் ரிப்போர்டராக சூப்பர் வாய்ப்பு. நீங்கள் ஆசிரியரா? வானவில் மன்ற கருத்தாளரா? ஊரக வளர்ச்சித் துறையில் ஒப்பந்த ஊழியரா? சுய உதவிக்குழு உறுப்பினரா? ஆம் என்றால் உங்கள் பணி குறித்த நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்டு பண மழையில் நனையுங்கள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 11, 2026
கிருஷ்ணகிரி: தொழிலதிபர் குத்திக் கொலை – போலீஸ் அதிரடி

கெலமங்கலம், குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் குரு பிரசாத், கடந்த 7ம் தேதி குத்திக் கொலை செய்யப்பட்டார். பணப் பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் பதுங்கி இருந்த சுரேஷ், பாபு, நவீன், தேவராஜ், வெங்கடேஷ் ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News January 11, 2026
கிருஷ்ணகிரி: சாலை விபத்தில் இளம்பெண் பலி!

கிருஷ்ணகிரி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 35 வயது பெண் ஒருவர் ஜன.9 ஆம் தேதி மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பெண் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாலுகா போலீசார் இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
News January 11, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (10.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியோர்கள் ஏதேனும் அசம்பாதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம், என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!


