News April 14, 2024
கிருஷ்ணகிரி: யானை மிதித்து பலி

தளி அருகே உள்ள சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா(65) என்பவர் நேற்று மாலை விவசாய நிலத்திற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் இன்று காலை தேடிச்சென்ற போது அவரை காட்டு யானை மிதித்து இறந்துள்ளது தெரியவந்தது. இதனால் கிராம மக்கள் கொந்தளித்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த யானை சுற்றி வந்த நிலையில் வனத்துறையினர் கண்டுக்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
Similar News
News April 19, 2025
கிருஷ்ணகிரி முக்கிய தொடர்பு எண்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு துறை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் 04343239400, மாவட்ட வருவாய் அலுவலர் 04343231300, திட்ட அலுவலர் 04343239364, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 04343239030, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 04343235655, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் 04343235591, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 04343238777. ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
அரசு போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News April 19, 2025
ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.