News April 6, 2025
கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி மறைவு

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனப்பள்ளி கிருஷ்ணா கல்வி நிறுவனம் பாரத் கல்வி அறக்கட்டளை தலைவரும் கிருஷ்ணகிரி முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான C.பெருமாள் இன்று காலை 5.00 மணி அளவில் இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (28.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
கிருஷ்ணகிரி: நுகர்வோர் குறைதீர் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: எரிவாயு உருளைகள் பதிவு, விநியோகம் மற்றும் புகார் தொடர்பான அக்டோபர் 2025 நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், வரும் வியாழக்கிழமை (அக்.31) மாலை 3:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
மழைக் காலங்களில் செய்ய வேண்டியவை – ஆட்சியர் அறிவுரை

கிருஷ்ணகிரி: மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை குறித்து மாவட்ட ஆட்சியர் சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருகவும், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும், தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும், உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


