News April 17, 2025

கிருஷ்ணகிரி: முதல்வர் இளைஞர் விருதுக்கு விண்ணப்பம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியவர்கள் 2025 ம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் மே.3 மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் இ.ஆ.ப., தகவல் அறிவித்துள்ளார். 

Similar News

News August 9, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 8) 198.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பம்பர் டேமில் அதிகபட்சமாக 70.00 மி.மீ மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து நெடுங்கல் 34.00 மி.மீ, ஊத்தங்கரை 28.0 மி.மீ, போச்சம்பள்ளி 21.80 மி.மீ, மற்றும் பர்கூரில் 21.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

News August 9, 2025

கிருஷ்ணகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உட்பட 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க.

News August 9, 2025

கூகுள் மேப் மூலம் வந்தவருக்கு நேர்ந்த கதி

image

ஓசூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மேம்பாலம் பழுதானதால் கனரக வாகனங்கள் பாலத்தின் மீது செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் லாரி மற்றும் கனரக வாகனங்கள் வேறு வழியில் செல்கின்றன. இந்நிலையில் மேட்டூரில் இருந்து மூன்று சிமெண்ட் கலவை டேங்கர் லாரி, கூகுள் மேப் மூலம் ராயக்கோட்டை சாலை வழியாக நகருக்குள் புகுந்து மின்கம்பத்தின் மீது மோதியதில் மின்கம்பம் சேதமடைந்து கீழே விழுந்தது.

error: Content is protected !!