News April 16, 2025
கிருஷ்ணகிரி: மீன் பாசி குத்தகை: ஆட்சியர் தகவல்

சூளகிரி சின்னாறு அணையினை மீன் பாசி குத்தகை பெற விருப்பம் உள்ளவர்கள் 21-04-25-க்குள் www.tntenders.gov.in இல் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்தார். மேலும் ஒப்பந்தப்புள்ளிகள் 21.4.2025 பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் inlandfisheries15@gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
கிருஷ்ணகிரி: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். யாராவது ஒருவருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க.
News November 7, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (06.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
கிருஷ்ணகிரி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

கிருஷ்ணைரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


