News November 23, 2024
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (நவ 23) மற்றும் நாளை (நவ 24) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெறவும்.
Similar News
News November 24, 2025
கிருஷ்ணகிரி: ரூ.15000 மானியம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி ஆதிதிராவிடர் & பழங்குடியினருக்கு புதிய மின்மோட்டார் மாற்றத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், நுண்ணீர் பாசனம் அமைத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள்: சிட்டா, வரைபடம், ஜாதிச்சான்று, மார்பளவு புகைப்படம், ஆதார். மானியம் மின் மோட்டார் விலையின் ரூ.15000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 94430 83493 க்கு தொடர்பு கொள்ளலாம். என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News November 24, 2025
கிருஷ்ணகிரி: விரல் நுனியில் ரேஷன் விவரங்கள்!

தமிழ்நாடு குடும்ப அட்டைதாரர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி தான் TNePDS மொபைல் செயலி. இதன் மூலம் உங்களுடைய ரேஷன் கடையில் என்ன பொருட்கள் உள்ளன என்ற இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளலாம். அதே சமயம், தங்களின் ரசீதுகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இந்த செயலியை <


