News October 25, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள்,துணி, நகைக்கடைகள்,தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவுத்துறை சங்கம் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் புகார் அளிக்கும் வகையில் 4பேர் கொண்ட புகார் குழு 50 சதவீத பெண்கள் இடம்பெறும் வகையில் அமைக்க வேண்டும். தவறினால் ரூ50,000 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை.

Similar News

News November 15, 2025

கிருஷ்ணகிரி: கணவனை காணவில்லை என மனைவி புகார்!

image

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அடுத்த தேர்பட்டியை சேர்ந்தவர் மகா-விஷ்ணு (31). இவர் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகா-விஷ்ணு வீட்டிற்கு வரவில்லை. இதனால் கவலையடைந்த அவரது மனைவி, காவேரிபட்டணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 15, 2025

கிருஷ்ணகிரியில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

போச்சம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, பாரண்டப்பள்ளி கிரிகேபள்ளி, சந்திராப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News November 14, 2025

கிருஷ்ணகிரி அருகே குழந்தைகளுடன் உணவருந்திய ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் ஜிப்சி குழந்தைகள் இல்லத்தில், தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, ஆட்சியர் திரு.ச.தினேஷ் குமார் இன்று (நவ.14) குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ர.சக்தி காவியா, வட்டாட்சியர் ரமேஷ், குழந்தைகள் இல்ல காப்பாளர் கிருஷ்டோபர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

error: Content is protected !!