News December 6, 2024
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சசிகலா வருகை ஒத்திவைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் அதிக அளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட இன்று (06) சசிகலா வருகை தர இருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் இன்று வருகை தர இருந்த நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 8) 198.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பம்பர் டேமில் அதிகபட்சமாக 70.00 மி.மீ மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து நெடுங்கல் 34.00 மி.மீ, ஊத்தங்கரை 28.0 மி.மீ, போச்சம்பள்ளி 21.80 மி.மீ, மற்றும் பர்கூரில் 21.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
News August 9, 2025
கிருஷ்ணகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உட்பட 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க.
News August 9, 2025
கூகுள் மேப் மூலம் வந்தவருக்கு நேர்ந்த கதி

ஓசூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மேம்பாலம் பழுதானதால் கனரக வாகனங்கள் பாலத்தின் மீது செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் லாரி மற்றும் கனரக வாகனங்கள் வேறு வழியில் செல்கின்றன. இந்நிலையில் மேட்டூரில் இருந்து மூன்று சிமெண்ட் கலவை டேங்கர் லாரி, கூகுள் மேப் மூலம் ராயக்கோட்டை சாலை வழியாக நகருக்குள் புகுந்து மின்கம்பத்தின் மீது மோதியதில் மின்கம்பம் சேதமடைந்து கீழே விழுந்தது.