News April 16, 2024

கிருஷ்ணகிரி: பெண்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்

image

கிருஷ்ணகிரி எம்பி தொகுதி பாஜக வேட்பாளர் சி.நரசிம்மனை ஆதரித்து போச்சம்பள்ளி அருகே காட்டாகரம், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தாமரைச் சின்னத்திற்கு பர்கூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜெ.எம்.ரமேஷ் தலைமையில் பாஜகவினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் நேற்று ஏராளமான பெண்கள் தாமரைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

Similar News

News July 8, 2025

உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள்<> இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

அரசு பள்ளிக்கு விருது வழங்கிய அமைச்சர்

image

கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது. இதனால் தமிழ்நாடு அரசு மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பிரிவில் அறிஞர்அண்ணா தலைமைத்துவ விருதினையும், பரிசுத் தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

தேன்கனிக்கோட்டை பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்

image

தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 10 வயதுடைய 5-ம் வகுப்பு மாணவி பள்ளி தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.

error: Content is protected !!