News April 26, 2025
கிருஷ்ணகிரி பெண்களே மிஸ் பண்ணிராதீங்க

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் இன்று( ஏப். 26) காலை 9 மணி முதல் பிரதேகமாக பெண்களுக்கு மட்டும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பங்கேற்று 3000+ காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மாத சம்பளம் ரூ.12,000- ரூ.16,000 வழங்கப்படும். இந்த முகாம் பிற்பகல் 1 மணிவரை நடைபெறுகிறது. மிஸ் பண்ணிராதீங்க. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 1, 2025
கிருஷ்ணகிரி: மூதாட்டியை தாக்கி 4 கிராம் தங்க கம்மல் கொள்ளை!

பெரிய தளிப்பட்டியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி முத்தம்மாள் (55). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத நபர் முத்தம்மாளை தாக்கி காதில் இருந்தருந்த 4 கிராம் கம்மலை பறித்துக்கொண்டு தளிப்பட்டி ஏரியில் குதித்தார். நாகரம்பட்டி போலீசார் ஏரியில் இருந்த அவரை பிடித்து கைது விசாரணையில். அவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த அன்பரசு என்பது தெரியவந்தது.
News December 1, 2025
கிருஷ்ணகிரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 1, 2025
கிருஷ்ணகிரி: லாரியின் கிரெய்ன் விழுந்ததால் ஒருவர் பலி!

கிருஷ்ணகிரி-குப்பம் ரோட்டில் டாரஸ் லாரி கிரெய்ன் ஒன்றை, நேற்று (நவ.30) ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் கந்திகுப்பம் அருகில் உள்ள காளி கோயில் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது வளைவில் மிகவேகமாக வாகனத்தை முந்திசெல்ல முயன்றபோது, கிரைன் பெல்ட் அறுந்து கிரைன் கீழே சரிந்து விழுந்தது. இதில் அருகில் சென்ற ஒருவர் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


