News April 24, 2025
கிருஷ்ணகிரி பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04347-235847, ஓசூர் – 04344-261100, கிருஷ்ணகிரி – 04347-235045, பர்கூர் – 04344-256038, ஊத்தங்கரை – 9445086369. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
Similar News
News December 4, 2025
கிருஷ்ணகிரி: காவல்துறையின் பரிசு மோசடி எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில், இன்று (டிச.04) பரிசு மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அறிமுகமில்லாதவர்கள் அதிக மதிப்புள்ள பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதாக கூறி பணம் பறிக்கும் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சந்தர்ப்பங்களில் பணம் செலுத்த வேண்டாம் எனக் கூறிய காவல்துறை, சந்தேகங்கள் ஏற்பட்டால் 1930 எண்ணிற்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
News December 4, 2025
கிருஷ்ணகிரியில் தந்தை பெரியார் விருது அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில், தந்தை பெரியார் விருது 2025ற்கான அறிவிப்பு இன்று (டிச.04) வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதிக்காக செயற்பட்டு வரும் நபர்களை கௌரவிக்கும் இந்த விருதுக்கு ரூ.5,00,000 பணத்தொகையும், தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இதற்கு பொதுநல பணிகள் & சமத்துவக் கொள்கைகள் முன்னெடுத்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேவைப்படும் ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் வரும் டிச.18குள் சமர்ப்பிக்கலாம்.
News December 4, 2025
கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில் பெண் தற்கொலை!

கிருஷ்ணகிரி, கெலமங்கலம் அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார்.இவரது மனைவி காயத்ரி(25). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆனா நிலையில், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். யோதனால் விரக்தியடைந்த காயத்ரி, 6 மாதங்களுக்கு முன் தன் தாய் வீட்டிற்கு சென்றார். பின் அவர், நேற்று முன்தினம் வீட்டிலுள்ள 8 அடி தண்ணீர் தொட்டியில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இதனை, அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


