News May 16, 2024
கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

பா்கூர்: முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடந்தது. இதில் கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடித்துக்காட்டினா்.
Similar News
News December 13, 2025
ஓசூர்: மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு

ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று(டிச-13) மற்றும் நாளை (டிச.14) மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தேர்வானது நிர்வாக காரணங்களால் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் ஓசூர் தொழிற்பயிற்சி நிலையத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் நேற்று(டிச.12) தகவல் தெரிவித்தார்.
News December 13, 2025
கிருஷ்ணகிரியில் வேலை வேண்டுமா..?

கிருஷ்ணகிரி அடுத்து ராயக்கோட்டை ரோடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று(டிச.13) காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில், நூற்றுக்கு மேற்பட்ட தனியார் கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. 8 ,10,+2, ஐ டிஐ, டிகிரி,BE, நர்சிங், முடித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைய கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. (SHARE IT)
News December 13, 2025
கிருஷ்ணகிரி வருகிறார் இளையராஜா!

ஓசூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே தன்வந்திரி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் வருடாபிஷேக விழா கடந்த டிச.8ஆம் தேதி தொடங்கி நடபெற்று வருகிறது. நாளை(டிச.14) இந்த விழா நிறைவடைகிறது. இந்நிலையில், ஓர் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை ஒசூர் வருகை தரும் இளையராஜாவை, தனவந்திரி கோயிலுக்கு வருகை தருமாறு அறங்காவல் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


