News March 25, 2024
கிருஷ்ணகிரி: தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு

கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை சரிபார்த்து 20 நாள்களில் மறு எண்ணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Similar News
News December 12, 2025
பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், விதிரா செல்ஃப்கேர் பிளஸ் திட்டத்தின் கீழ் 13 முதல் 18 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க https://awards.tn.gov.in மூலம் 20-12-2025க்குள் தனிச்சான்றுகள் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
News December 12, 2025
கிருஷ்ணகிரியில் மின்கம்பி உதவியாளர் தேர்வு தேதி மாற்றம் அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 13 மற்றும் 14 டிசம்பர் 2025 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த மின்கம்பி இணைப்பு உதவியாளர் (Wireman Helper) தேர்வு, நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டது. புதிய தேர்வு தேதிகள் டிசம்பர் 27, 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தகுதி விவரங்கள் மற்றும் நுழைவுச்சீட்டு ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலேயே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 12, 2025
கிருஷ்ணகிரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்கரையில் (டிச.13) “நலம் காக்கும் திட்டம்” முகாம் நடைபெறுகிறது. மருத்துவ பரிசோதனை, 3000 விதமான பரிசோதனைகள், எகோ, எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றது. முதியோர், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பல துறைகளில் நிபுணர் ஆலோசனைகள் வழங்கப்படும். முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.


