News October 23, 2024
கிருஷ்ணகிரி சீர்மரபினருக்கு ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி மருத்துவம், ஓய்வூதியம், திருமணம் ஆகியவற்றிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 24.10.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 11-ல் நடத்தப்பட உள்ளது. எனவே தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அறிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
கிருஷ்ணகிரி: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. கிருஷ்ணகிரியில் மட்டும் 50 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 4, 2025
கிருஷ்ணகிரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

இன்று நவ- 4 முதல் டிச-4 வரை – வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி, டிச-9- வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், டிச-9 முதல் ஜன-8 வரை – ஏற்கனவே சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல், டிச-9 முதல் ஜன- 31 வரை- அறிவிப்பு காலம் விசாரணை & சரிபார்த்தல், பிப்-07- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடல். என, த்ஹறுத்த பட்டியல் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
News November 4, 2025
கிருஷ்ணகிரி: 3ம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகே மஞ்சமேடு கிராமத்தில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்து வணிக கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கஜ லட்சுமி சிற்பம், யானை, குத்துவிளக்கு போன்ற வணிகச் சின்னங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், இது 825 ஆண்டுகள் பழமையான வணிகக்குழு கல்வெட்டாகும் என உறுதி செய்யப்பட்டது.


