News March 29, 2024
கிருஷ்ணகிரி: கரும்பு விவசாயி வேட்பாளர் மீது தாக்குதல்

திராவிட தெலுங்கு தேசம் கட்சியும் பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சியும் இணைந்து தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இக்கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரியில் போட்டியிடும் கனி ஆறுமுகம் நேற்று வேட்பு மனு பரிசீலனைக்காக ஆட்சியரகத்திற்கு வருகை தந்து திரும்பி சென்றார். அப்போது அவரை வழி மறித்த நாம்தமிழர் கட்சியினர், எங்கள் சின்னத்தை பறித்து விட்டீர்கள் என கூறி தாக்கியுள்ளனர்.
Similar News
News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கிருஷ்ணகிரியில் காலியாக உள்ள 732 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.<
News April 18, 2025
மத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

மத்தூர் அடுத்து சிவம்பட்டி கிராமத்தில் சக்திவேல் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ் (39), இவருக்கு கடந்த மூன்று மாத காலமாக வயிறு வலி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News April 18, 2025
வேன் மீது கார் மோதி விபத்து பெண் உயிரிழப்பு

போச்சம்பள்ளி அடுத்த, காமாட்சிப்பட்டியை சேர்ந்த கோபிநாத் (42) குடும்பத்துடன் மாருதி 800 காரில் சுற்றுலா சென்று விட்டு திரும்பினார். அப்போது மத்துார் அருகே, கண்ணன்டஹள்ளியில், எதிரே வந்த ஈச்சர் வேன் மீது கார் மோதியது. இதில், காரிலிருந்த அவரது தாய் உமாராணி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் இடிபாடுகளில் சிக்கிய கோபிநாத்தை 2 மணி நேரம் போராடி போலீசார் மீட்டனர்.