News August 3, 2024
கிருஷ்ணகிரி என்பதன் பெயர் காரணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30 வது மாவட்டமாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து உருவானது. ‘கிருஷ்ணா’ என்பது கறுப்பு என்றும் “கிரி” என்பது மலை என்றும் குறிக்கிறது. கறுப்பு கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் இந்த மாவட்டம் கிருஷ்ணகிரி என பெயர் பெற்றது. மேலும், கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் கீழ் இப்பகுதி இருந்ததால் கிருஷ்ணகிரி என்ற பெயர் வந்திருக்கலாம் என சிலர் தெரிவிக்கின்றனர். பெயர் காரணத்தை பகிரவும்.
Similar News
News September 18, 2025
கிருஷ்ணகிரியில் 12ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், அலேகுந்தாணி கிராமத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்திபட்டான் நடுகல் இன்று செப்டம்பர் 18ஆம் தேதி கண்டெடுக்கப் பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நடுகலில் வீரர் புலியை வெற்றி கொண்ட காட்சியுடன் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கண்டுபிடிப்பு கிராமத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க*
News September 18, 2025
கிருஷ்ணகிரி: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

கிருஷ்ணகிரி மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ.தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். இந்த <
News September 18, 2025
சென்னையை போல மாறும் ஓசூர்!

தமிழ்நாட்டின் தொழில் மற்றும் தொழில்நுட்ப மையமாக ஓசூரை உருவாக்க, மாநில அரசு தீவிரமாகப் பணியாற்றுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓசூரில் அவுட்டர் ரிங் ரோடு, சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு மற்றும் பிற முக்கிய சாலைகளை இணைத்து, ஒரு அறிவுசார் வழித்தடத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், சென்னை போன்று ஓசூரும் ஒரு அறிவுசார் மையமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!