News May 15, 2024
கிருஷ்ணகிரி அருகே போராட்டம் வாபஸ்

தளி சட்டமன்றத் தொகுதியில் யானைகள் தாக்கி தொடர் மனித உயிர் பலியாவதை கண்டித்து வனத்துறை அலுவலகம் முன்பு சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் DFO, DSP தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒற்றை யானைகளை காட்டுக்குள் விரட்டப்படும் எனவும் யானைகள் ஊருக்குள் வராமல் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
Similar News
News July 5, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை.05) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 5, 2025
அஞ்செட்டி தலைமை காவலர் பணியிடமாற்றம்

அஞ்செட்டி அருகில் மாவனட்டி கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி சிறுவன் ரோகித் கடத்தி கொலை செய்யப்பட்டார். கடத்தல் சம்பவத்தை அறிந்து சிறுவனின் பெற்றோர் அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றபோது தலைமை காவலர் சின்னதுரை சிறுவனின் பெற்றோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்த எஸ்.பி தங்கதுரை தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
News July 5, 2025
பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <