News March 29, 2024
கிருஷ்ணகிரி அருகே குவிந்த மக்கள்

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சி அடிவிசாமிபுரத்தை சேர்ந்த மலை மீது மதனகிரி முனீஸ்வரா சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதில் கணபதி பூஜை, வாஸ்து ஹோமம் கலசஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தபட்டு நேற்று பல இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Similar News
News April 15, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 15, 2025
மழை வரவழைக்கும் அதிசய கோயில்

ஓசூரில் குன்றின் மேல் அமைத்துள்ளது ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயில். இங்கு பிரகாரத்தில் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் உள்ள ஜலகண்டேசுவரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. மழை இல்லாத காலத்தில் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஊற்றி சிறப்பு பூஜை நடத்துவார்கள்.தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறும் இந்த பூஜையில் தொட்டியில் உள்ள தண்ணீர் வற்றாமல் இருந்தால் மழை வரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 15, 2025
மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <