News August 24, 2024
கிருஷ்ணகிரி அருகே காதல் ஜோடி தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஒரே சமூகத்தை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, 17 வயது கல்லூரி மாணவி இருவரும் காதலித்தனர். மாணவியின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். கொத்தாலம் கிராமத்தில் உள்ள நரசிம்மமூர்த்தி வீட்டில் இருவரும் தூக்கில் தொடங்கியபடி சடலமாக இன்று காலை 11 மணிக்கு மீட்கப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
கிருஷ்ணகிரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 1, 2025
கிருஷ்ணகிரி: லாரியின் கிரெய்ன் விழுந்ததால் ஒருவர் பலி!

கிருஷ்ணகிரி-குப்பம் ரோட்டில் டாரஸ் லாரி கிரெய்ன் ஒன்றை, நேற்று (நவ.30) ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் கந்திகுப்பம் அருகில் உள்ள காளி கோயில் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது வளைவில் மிகவேகமாக வாகனத்தை முந்திசெல்ல முயன்றபோது, கிரைன் பெல்ட் அறுந்து கிரைன் கீழே சரிந்து விழுந்தது. இதில் அருகில் சென்ற ஒருவர் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
News December 1, 2025
கிருஷ்ணகிரி: சொத்து தகராற்றில் மூதாட்டி கொலை- 3பேர் கைது

பர்கூர் அருகே மேல்சீனிவாசபுரத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (56) இவர் கடந்த 25 ஆம் தேதி பண்ணைக்குட்டை அருகே மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரணையில் சொத்துத் தகராறில் காரணமாக கோவிந்தம்மாள் கட்டையால் தாக்கியும், கழுதை நெரித்தும் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. கொலை செய்த சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் 3 பேரை போலீஸார் நேற்று (நவ.30) கைது செய்தனர்.


