News March 23, 2024

கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வு பிரச்சாரம்

image

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் அரசுப்பள்ளி, லயன்ஸ்கிளப், நேருயுவகேந்திரா அறிவியல் இயக்கம் போன்றவைகள் இணைந்து நெகிழியை தவிர்ப்போம், மஞ்சள் பையை மீண்டும் பயன்படுத்துவோம் என்றும், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 11, 2025

குழந்தை உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

image

அஞ்செட்டி, கடுகுநத்தத்தை சேர்ந்த சின்னதுரை – பிரீத்தா தம்பதியின் மகன் பிரசாந்த்,(4). மார்ச் 30ல், வீட்டு மாடி படிக்கட்டில் தவறி விழுந்ததில் குழந்தையின் தொடையில் அடிபட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று குழந்தை ஜன்னி வந்து இறந்ததாக கூறியுள்ளனர். 4 வயது குழந்தை இறப்புக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News April 11, 2025

கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு இறுதி வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு இரண்டு மாதங்களாக ஆங்காங்கே விவசாயிகளின் நில உடமை சரி பார்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நில உடைமைகளை இதுவரையில் இணைக்காமல் உள்ளனர். இதனால் உடனடியாக அருகில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஏப்ரல் 15க்குள் இணைக்க வலியுறுத்தி உள்ளனர்.

News April 11, 2025

 சீறிப்பாய்ந்த காளை கன்றுகள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த அரியனப்பள்ளி கிராமத்தில் நேற்று (ஏப்ரல் 10) இப்பகுதி மக்கள் சார்பாக மாபெரும் கன்றுவிடும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட காளை கன்றுகள் பங்கேற்றன. விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!