News April 5, 2025
கிருஷ்ணகிரியில் விசிட் பண்ண சூப்பர் ஸ்பாட்

கிருஷ்ணகிரியில் அப்சரா திரையரங்கத்தினருகே மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கலை மற்றும் தொல்லியல், மானிடவியல், மண்ணியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளைச் சேர்ந்த பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கிருஷ்ணகிரியிலிருந்து சேகரிக்கப்பட்ட பல வரலாற்று சின்னங்களை காணலாம். இங்கு கிருஷ்ணகிரியை பற்றி நீங்கள் அறியாத வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 17, 2025
கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் (செ. 19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10-மணி முதல் 1-மணி வரை நடைபெற உள்ளது. ஆர்டிஓ அலுவலகம் எதிரில்- மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், நடைபெறும். 10,+2, ஐடிஐ டிப்ளமோ டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News September 16, 2025
JUST IN: ஓசூரில் ஊசி போட்ட பெண் சுருண்டு விழுந்து பலி

ஓசூர் அரசு மருத்துவமனையில் இன்று கால் வலி சிகிச்சைக்காக ஓசூர் ராம்நகரை சேர்ந்த இம்ரான் என்பவரது மனைவி ரேஷ்மா சென்றுள்ளார். அப்போது மருத்துவர் வலி நிவாரண ஊசி செலுத்தியுள்ளார். ஊசி போட்டபின் சில மணி நேரத்தில் அவர் அரசு மருத்துவமனையில் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ஓசூர் நகர போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 16, 2025
ஓசூர் மக்களுக்கு அடுத்தடுத்த குட் நியூஸ்!

ஓசூர் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, பேரிகை–பாகலூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2300 ஏக்கரில் அமையவுள்ள இந்த விமான நிலையம் ஓசூர் மக்களுக்கு & தெற்கு பெங்களூரு மக்களுக்கும் ஏற்றுமதி–இறக்குமதி வசதி தரும். சாலை இணைப்புகள் வலுவாக உள்ளதால் வளர்ச்சி வேகமாகும் என அரசு நம்புகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நிலம் கையகப்படுத்தல் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.