News May 6, 2024
கிருஷ்ணகிரியில் மழை…!

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாளை 7-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 8-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News May 7, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.1) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News May 7, 2025
கிருஷ்ணகிரியில் தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

சென்னை சாலையில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல அலுவலகம், கிருஷ்ணகிரி கிளை சார்பில் தொழிலாளர் தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. LPF தொழில் சங்கம் நிர்வாகிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் இணைந்து தொழிலாளர் கொண்டாடினர். கொடி ஏற்றி மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News May 7, 2025
கிருஷ்ணகிரி: இலவச வீட்டுமனை பட்டா பெற சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள கிராமத்தார் மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்துவரும் தகுதியான நபர்களுக்கு, வீட்டு மனைப்பட்டா பெறுவதற்காக நாளை (மே.2) அனைத்து வருவாய் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா பெற விண்ணப்பித்து பயன்பெற திமுக மா. செயலாளர் எம்எல்ஏ மதியழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.