News April 1, 2025

கிருஷ்ணகிரியில் புதிய சுற்றுலா மாளிகை அமைச்சர் தகவல்

image

ஓசூரில் ரூ 9.90 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுலா மாளிகை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்களின் மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். இதற்கு விரைவில் இடம் ஒதுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் சட்டப்பேரவை தெரிவித்தார். உங்க ஊர் மக்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News November 28, 2025

கிருஷ்ணகிரி தேர்தல் பணியாளர்கள் கௌரவிப்பு

image

நேற்று (நவ-27)ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100% (எஸ்ஐஆர்) கணக்கீட்டு படிவங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த சிறப்பான பணியை நிறைவேற்றிய 9 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

News November 28, 2025

கிருஷ்ணகிரியில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

image

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்த்தில் இன்று (நவ.28) மாதாந்திர பணிகள் நடைபெறவுள்ளது. அதனால், தொழில் பேட்டை, பவர் ஹவுஸ், சந்தப்பேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன்நகர், பழைய பேட்டை, கே ஆர் பி டேம், சுண்டே குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.

News November 28, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!