News April 4, 2025
கிருஷ்ணகிரியில் கார் மோதி ஒருவர் பலி

ஓசூர், தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் வீரப்பா, 38, டைலர். இவர் நேற்று முன்தினம் மதியம் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றுள்ளார். மரக்கட்டா முனியப்பன் கோவில் அருகே, தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த சுசுகி சென் கார் மோதி பலியானார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 5, 2025
யானை முகம் கொண்ட சிவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் உள்ளது ஐராவத ஈசுவரர் கோயில். முன்,பின் என இரட்டை கருவறைகள் கொண்ட இந்த கோயிலின் பின்புறம் உள்ள கருவறையில் உள்ள லிங்கத்தில் யானையின் முகம் உள்ளது.ஹஸ்தி என்ற யானை வந்து வழிபட்டதால் லிங்கம் யானை முகம் பெற்றது. அதனால் இந்த ஊர் முதலில் ஹஸ்திமுகம் என பெயர் பெற்று இன்று அத்திமுகம் என மாறியுள்ளது. தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க..
News April 5, 2025
மெஷின் ஆப்பரேட்டர் வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள டெல்டா சிஎன்சி அப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 18-25 வயதுக்குட்பட்டவர்கள் டிப்ளமா கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். இப்பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <
News April 5, 2025
அதிகாலையில் சரக்கு வாகனம் கோர விபத்து

கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3:30am சரக்கு வாகனம் (HR38AB2055) தமிழ்நாட்டிற்கு சரக்கு ஏற்றி வந்த நிலையில் சப்பாணிப்பட்டியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள ஹோட்டலில் புகுந்தது. இதில் வாகனம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் கிளீனர் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.