News June 26, 2024
கிருஷ்ணகிரியில் இலவச பஸ் பாஸ் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 270 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று (ஜூன் 25) வழங்கினார். உடன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News January 7, 2026
ஓசூரில் குளத்தில் விழுந்து தற்கொலை!

கிருஷ்ணகிரி: ஓசூர் ஹவுசிங் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(69), ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல சிகிச்சைகள் பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த அவர், தேர்பேட்டை பச்சை குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்ட ஓசூர் டவுன் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 7, 2026
கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி!

பர்கூர், மல்லப்பாடியைச் சேர்ந்தவர் திருமலை(30). எலக்ட்ரீசீயனான இவர், நேற்று முன் தினம் சின்ன பர்கூரில் புதிதாக கட்டப்பட்டு வரு வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தீடீரென மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 7, 2026
கிருஷ்ணகிரியில் வெடிகுண்டு மிரட்டல்!

கிருஷ்ணகிரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மெயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் உடனடியாக அனைவரையும் வெளியேற்றி நீதிமன்ற மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எவ்வித தடயமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


