News August 8, 2024
கிருஷ்ணகிரியில் அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நேரலகிரி வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்தது. இந்த யானை அவ்வப்போது விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது. கடந்த வாரம் வனத்துறை மற்றும் மின் ஊழியர்களை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். இந்த யானை பல்வேறு பகுதிகளில் சுற்றி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
Similar News
News November 14, 2025
கிருஷ்ணகிரி : லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04343- 292275) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
News November 14, 2025
கிருஷ்ணகிரியில் நாளை எங்கெல்லாம் கரண்ட் கட்?

போச்சம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, பாரண்டப்பள்ளி கிரிகேபள்ளி, சந்திராப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 14, 2025
கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


