News May 7, 2025

கிருஷ்ணகிரியில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News August 10, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது

News August 9, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 8) 198.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பம்பர் டேமில் அதிகபட்சமாக 70.00 மி.மீ மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து நெடுங்கல் 34.00 மி.மீ, ஊத்தங்கரை 28.0 மி.மீ, போச்சம்பள்ளி 21.80 மி.மீ, மற்றும் பர்கூரில் 21.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

News August 9, 2025

கிருஷ்ணகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உட்பட 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க.

error: Content is protected !!