News April 25, 2025

கிருஷ்ணகிரியின் ரம்மியமான காட்சிகள்

image

கிருஷ்ணகிரி மலைகள் சூழ்ந்த அழகான ஒரு பகுதியாகும். 2004ஆம் ஆண்டு முதல் இது தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. இந்கு நிலவும் ரம்மியமான வானிலை மனதுக்கு இதம் அளிக்க கூடியதாக உள்ளது. இயற்கை வளங்கள் சூழ்ந்த இந்த மாவட்டத்தில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் ஆணிவேர் விவசாயம். மனதை கொள்ளை அடிக்கும் கிருஷ்ணகிரியின் அழகிய காட்சிகளை ரசித்து மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News November 12, 2025

கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (11.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தகவல். முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை சமர்ப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்

News November 11, 2025

கிருஷ்ணகிரி உலுக்கிய லெஸ்பியன் உறவு.. போட்டோஸ் வைரல்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே 5 மாத ஆண் குழந்தை மர்மமாக நவ-5, உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், குழந்தையின் தாய் பாரதி (25) தனது காதலி சுமித்ரா (22) உடன் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், பாரதி சுமித்ராவுக்கு அனுப்பிய அதிர்ச்சி போட்டோஸ் தற்போது வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!