News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News July 5, 2025
விருதுநகர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.07.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனு மூலம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலைக்கு சீல்

வெம்பக்கோட்டை செவல்பட்டி ஸ்ரீ மகேஸ்வரன் பட்டாசு ஆலையில் வி. ஏ.ஓ. சீனிராஜ் தலைமையில் வருவாய்த் துறையினர், போலீசார் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பேன்சி ரக பட்டாசுகளை மரத்திற்கு அடியில் வைத்து தயாரித்த சிவகாசி சேர்ம சங்கரை (37) போலீசார் கைது செய்தனர். அதில் 55 பேன்சி ரக பட்டாசுகள், மிஷின் திரி மரப்பலகை, மூலப் பொருட்களை பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்தனர்.
News July 5, 2025
வத்திராயிருப்பு அருகே முதியவர் வெட்டிக் கொலை

வத்திராயிருப்பு மறவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணமூர்த்தி (57) கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பாலகிருஷ்ணமூர்த்திக்கும், இவரது மகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலசுந்தரம், அஜித்குமார் ஆகிய இருவரும் பாலகிருஷ்ணமூர்த்தியை அருவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.