News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (3/3)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News October 29, 2025

திருப்பத்தூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 29, 2025

திருப்பத்தூர்: மனைவிக்காக கணவன் விபரீத முடிவு!

image

ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்த் பாபு (37) ஊதுவத்தி கம்பனியில் வேலை செய்கிறார். நேற்று (அக். 28) மாலை தனது மனைவி திவ்யா இந்திரா நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டுக்கு சண்டை போட்டு சென்றுள்ளார். அவரை அழைக்க வந்த போது வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தனது பைக்கில் இந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News October 29, 2025

திருப்பத்தூர்: சாணிபவுடர் கலந்த தண்ணீரை குடித்த குழந்தைகள்

image

திருப்பத்தூர் அடுத்த போஸ்கோ நகர் பகுதியில் வாசலுக்கு தெளிக்கும் சாணிப்பவுடர் கலந்த தண்ணீரை விளையாட்டு வாக்கில் 4 குழந்தைகள் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே குழந்தைகளின் பெற்றோர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர். பெற்றோர்களே குழந்தைகளை கண்காணியுங்க.

error: Content is protected !!