News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 10, 2025
புதுக்கோட்டை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை SHARE செய்யுங்கள்!
News December 10, 2025
புதுக்கோட்டை: கடலில் விழுந்த மீனவர் மாயம் – சோகம்

புதுகை மாவட்டம் பத்தக்காடு பகுதி சேர்ந்த சேவியர்(45) மற்றும் பாஸ்கர்(46) இருவரும் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது 4 நாட்டிகள் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிந்த போது படகு பழுதானது. அதனை சரி செய்த போது 2 பேரும் கடலில் விழுந்தனர். இதில் பாஸ்கர் சக மீனவர்களால் மீட்கப்பட்டார். மாயமான சேவியரை கடலோர காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
News December 10, 2025
புதுக்கோட்டை: தப்பி ஓடிய சிறை கைதி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த சிறுமியை, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா காமாங்கா பாலியல் வண்புணர்வு செய்த சம்பவத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு. சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது போலீசிடம் இருந்து கைதி தப்பி ஓடியுள்ளார்.


