News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 6, 2025

தருமபுரி: Whats App மூலம் ஆதார் அட்டை!

image

தருமபுரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 6, 2025

தருமபுரி:30டன் ரேஷன் அரிசி கடத்தல் -ஒருவர் கைது!

image

பென்னாகரம் பிரதான சாலையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ர. (TN34V4487) சோதனை செய்தபோது பொக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொது விநியோகதிட்ட ரேஷன் அரிசி 600 முட்டைகளில் மொத்தமாக 30,000 கிலோ (30டன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த வாகனம் மற்றும் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை கைப்பற்றி சாமிசெட்டிப்பட்டி சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 6, 2025

தருமபுரி:போலி மருத்துவர் கைது!

image

தருமபுரி மருத்துவம் & ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையில், போலி மருத்துவர்கள் ஒழிப்புக் குழுவினர் அதியமான்கோட்டையில் கிளினிக் வைத்து நடத்திவந்த ஒரு வீட்டில் நேற்று ஆய்வு செய்தனர்.அங்கு கணேசன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.மருத்துவக் குழுவினர் விசாரணையில், அவர் பிளஸ் 2 வரை படித்த நிலையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததை எடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!