News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 15, 2025
கரூர்: டிகிரி முடித்தால் ரயில்வே துறையில் வேலை!

கரூர் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
கரூர்: முன் விரோத தகராறில் அடி உதை!

கரூர்: நொய்யல் அருகே உள்ள சேமங்கி கிருஷ்ணா இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(74) – அருணா(72) ஆகியோரின் மகன் ரவி(46). இவருக்கும், இவரது சகோதரர் குணாளன்(50) என்பவருக்கும் ஓர் இடப் பிரச்னையால் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், இதன் காரணமாக ரவியை குணாளன் மற்றும் பெற்றோர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதில் ரவி காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
News September 15, 2025
கரூரில் பைக் தடுமாறி சாலை விபத்து!

கரூர்: ஜெகதாபி அருகே ஆனந்த கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசிகாமணி (70) என்பவர், உப்பிடமங்கலம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது மனைவி கமலா ராணி அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.