News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 28, 2025
விருதுநகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமான மழை பெய்கிறது. இந்நிலையில் விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
News November 28, 2025
விருதுநகர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

விருதுநகர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News November 28, 2025
விருதுநகர்: ரூ.30.55 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

விருதுநகர் ரயில்வே நிலையத்தில் அமிர்த பாரத் திட்டத்தில் ரூ.30.55 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. தோரண நுழைவாயில் சுற்றுச்சுவர் கூரையுடன் கூடிய டூவிலர் கார்கள் காப்பகம், முகப்பு மேம்பாடு, மின் தூக்கி வசதியுடன் நடை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம் சிங் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


