News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News November 14, 2025
திருப்பூர்: திடீர் மின்தடை பிரச்னையா? உடனே CALL!

திருப்பூர் மாவட்டத்தில் அங்கங்கே மழை பெய்து வருகிறது எனவே பொதுவாக மழை நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் . மக்களே SHARE பண்ணுங்க!
News November 14, 2025
திருப்பூர்: சூப்பர் அரசு வேலை நல்ல சம்பளம்! APPLY NOW

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News November 14, 2025
வெள்ளகோவில் அருகே கார் கவிழ்ந்து விபத்து

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கரூர் சாலையில் இன்று அதிகாலை ஸ்ரீராம் நகர் அருகே நாய் குறுக்கே வந்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவர் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .விபத்து குறித்து காவல் துறை விசாரித்து வருகின்றனர்.


